சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

 மேட்டூர் அருகே மேச்சேரியில் திமுக, சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மேட்டூர் அருகே மேச்சேரியில் திமுக, சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மேட்டூர் அருகே மேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு தொழிலதிபரும், 7-வது வார்டு திமுக கவுன்சிலருமான விமல் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சுமதி ,ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், செங்கரும்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரேவதி வேலு, நகர செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் மோகன், சேகர், கலையரசன், சதீஷ், தனம் பிரசாத் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story