சமத்துவ பொங்கல் விழா

ராசிபுரத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு துறை சார்ந்த நிறுவனங்கள், என பலரும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

ராசிபுரம் மேட்டு தெரு பகுதியில் நண்பர்கள் குழு சார்பாக வருடம் தோறும் பொங்கல் விழாவன்று சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டு தை 1 மாலை அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி பொங்கலோ பொங்கல் என முழக்கங்கள் இட்டனர். மேலும் பல்வேறு விளையாட்டுகள் கயிறு இழுத்தல், மண்பானை உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், கோலப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் வைத்து சிறப்பாக பொங்கலை கொண்டாடினர். மேலும் பொங்கலின் மகத்துவத்தை குறித்து நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி. பாலு மற்றும் மக்கள் நலக்குழு தலைவர் நல்வினைச் செல்வன் ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கம் அளித்து பேசினர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பாக பொங்கலை கொண்டாடி மகிழ்தனர். இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் குழந்தைகள்,சங்கர், அபிஷேக், கவின், கௌஷிக், சுரேந்தர், செல்வேந்திரன், நதிஷ், ராகவன், வைஷ்ணவ், வெற்றி, சுஜித், மோனிஷ், வெற்றி, மற்றும் காவலர் கார்த்தி, மோகன்தாஸ், பெரியசாமி , மணி பூசாரி ,கார்த்தி, சின்னராசு, சித்து, மகளிர் அணியினர் அனிதா, திவ்யா, பிரியா, காயத்திரி, ரித்தீஷ்கா என இந்த சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story