கல்லூரியில் சமத்துவ பொங்கல்

கல்லூரியில் சமத்துவ பொங்கல்

பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. 

பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இக் கல்லூரியில் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி செங்கரும்பு, மஞ்சள்குலையால் அலங்கரித்து, பட்டப்படிப்பு மாணவர்கள் 5 பானைகளிலும், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 6 பானைகளிலும் பொங்கலிட்டனர். பாரம்பரிய ஆடை அணிந்து ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவில்,300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story