ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்

ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் முகமது தஸ்தஹீர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகபகுதியில் அமைந்துள்ள முகமது தஸ்தஹிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் புத்தாடைகள் அணிந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்க வைத்து தோரணங்கள் அலங்கரித்து பொங்கல் வைத்து விழாவை அமர்க்கள படுத்தினர் இதனைத் தொடர்ந்து பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பள்ளியின் முதல்வர் சோமசுந்தரம் மற்றும் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் மதனி மொபைல்ஸ் உரிமையாளர் அமீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். அதன் பின்பு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பட்டது கிராமப்புற பாடல்களுக்கு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் சிறப்பாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியமடைய செய்தனர்.

Tags

Next Story