பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு -தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  -தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

தென்காசியில் சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் பாலின வன்முறை தவிர்த்தலுக் கான உறுதிமொழி ஏற்றனர். இந்த பேரணியில் வரதட்சணையை ஒழிப்போம். பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களை இழிவுபடுத்தும் செயல்களை புறக்கணிப்போம், பெண்களுக்கான உதவி எண் 181 என்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story