காட்டு யானைகள் விரட்டியடிப்பு : பொதுமக்கள் விவசாயிகள் நிம்மதி

60 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விரட்டியடிப்பு : பொதுமக்கள் விவசாயிகள் நிம்மதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இரண்டு குழுக்களாக சுற்றித் திரிந்து வந்தது. காட்டு யானைகளால் அச்சமடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் இரு பிரிவுகளாக நின்ற காட்டு யானைகள் கூட்டத்தை ஒன்று சேர்த்து பட்டாசுகள் வெடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்டினர். சானமாவு, சினிகிரிப்பள்ளி, காடுஉத்தனப்பள்ளி, ஜக்கேரி, பச்சப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக பேவநத்தம் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி சென்ற வனத்துறையினர் அங்கிருந்து தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். சானமாவு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட இந்த காட்டு யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story