ஈரோடு மனவளக்கலை புதிய யோகா வகுப்புகள் தொடக்கம்

வகுப்பில் கலந்து கொண்டவர்கள்
King 24X7 News (B) |11 May 2024 3:14 PM ISTஈரோடு பெரியார் நகரில் மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோவில் உள்ளது. இங்கு திங்கட். கிழமை முதல் புதிய யோகா வகுப்பு தொடங்க உள்ளது. தினந்தோறும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஒரு வகுப்பும், பெண்களுக்காக பகல் 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஒரு வகுப்பும் வருகிற 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதேபோல் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மற்றொரு யோகா வகுப்பும் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்புகளில் எளிய முறை தியான பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா, காயகல்ப பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளன. 14 வயதுக்கு மேற்பட்ட ஆண் -பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு வகுப்புகளும் தொடங்க உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம் என்று மனவளக்கலை மற்ற நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
