ஈரோடு : அனைத்து வட்டங்களிலும் நாளை பொதுவிநியோக திட்டகுறைதீர் முகாம்

ஈரோடு : அனைத்து வட்டங்களிலும் நாளை  பொதுவிநியோக திட்டகுறைதீர் முகாம்

ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா

பொதுவிநியோகத் திட்டகுறைதீர்க்கும் நாள் முகாம் நாளை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை,குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம்,கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்றும் இதனை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோட்டிற்கு சித்தோடு 09AK001PN நியாயவிலைக்கடையிலும் , பெருந்துறைக்கு பூவம்பாளையம் 09PY091PN நியாயவிலைக்கடையிலும் , மொடக்குறிச்சிக்கு வெள்ளிங்கிரிபுதூர், கொடுமுடிக்கு நஞ்சைகொளநல்லி 09AP074PN கடையிலும் , கோபிசெட்டிபாளையத்திற்கு கொண்டையம்பாளையம் 09DP071PN கடையிலும் , நம்பியூருக்கு ஒலாலக்கோலம் 09DP095PY என்ற கடையிலும் , பவானிக்கு ஒரிச்சேரி 09CP048PN என்ற கடையிலும் , அந்தியூருக்கு பச்சம்பாளையம் 09FB021PY கடையிலும் , சத்தியமங்கலத்திற்கு பூசாரிபாளையம் 09FP038PY என்ற கடையிலும், தாளவாடிக்கு மல்லன்குழி 09EZ064PN என்ற கடையிலும் முகாம் நடைபெறும் என்றும் இக்குறைதீர்க்கும் முகாமை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்

Tags

Next Story