சிபிஎஸ்இ தேர்வில் ஈரோடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி முதலிடம்
பாராட்டு விழா
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் ஈரோடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட குற்றவியல் நீதித்துறைத் தலைவர் அருண்குமார், துணைப் பொது மேலாளர் வெங்கட்கிருஷ்ணா ரெட்டி, பள்ளி முதல்வர் பிரவீனா , வட்டார பொறுப்பாளர் பெருமாள் கணேசன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்ஜீவா ரெட்டி, நில உரிமையாளர் வேலுசாமி, மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை ஸ்வேதா என்ற மாணவியும், 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை ஸ்ரீநிதி என்ற மாணவியும் மற்றும் அபிலாஷ் என்ற மாணவனும், 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை கவி சுவஸ்திகா என்ற மாணவியும் பெற்றுள்ளார். மேலும் 485 மதிப்பெண்கள் பெற்ற ரிதுமித்ரா, 483 மதிப்பெண்கள் பெற்ற ஐஸ்வர்யா, 482 மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீதர்ஷினி 481 மதிப்பெண்கள் பெற்ற ஹர்ஷிதா 480 மதிப்பெண்கள் பெற்ற ஆதித்யா மற்றும் ப்ரீத்திவி ஆகிய மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதேபோல் 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவி லக்ஷிதா ரவிக்குமார் 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பிரியங்கா என்ற மாணவி 476 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மீரா என்ற மாணவி 466 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர் . மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக பணியாற்றிய ஆசிரியர்களையும் துணைப் பொது மேலாளர் பாராட்டினார்.