வேளாளர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா

வேளாளர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா
X

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் 25ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 23வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளரும், தாளாளருமான எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஜிப்டி மற்றும் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனத்தின் சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் மனிதவள இயக்குநர் சத்திய பிரகாஷ் சேகரன் பங்கேற்று, கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு வகையில் சிறந்து விளங்கிய செயல்திறமைமிக்க 96 மாணவ-மாணவிகளுக்கு சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கினார்.

நடப்பாண்டில் வெளிச்செல்லும் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய செயற்கரிய 10 மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இந்த கல்வி ஆண்டின் இறுதியாண்டு பயிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை சார்ந்த நட்சத்திரா என்ற மாணவிக்கு மிகச்சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது. விழாவில் 636 மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பணி நியமன உத்தரவுகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் சத்திய பிரகாஷ் சேகரன் பேசுகையில் , மாணவர்கள் முதலில் தங்களை புரிந்து கொள்ள வேண்டும் , மாணவர்கள் தங்களது பெற்றோர்களை தங்கள் வாழ்க்கையில் சிறந்த தலைவர்களாக பின்பற்ற வேண்டும். புத்தகங்களை தங்கள் சிறந்த நண்பராக கருத வேண்டும் என்றார்

Tags

Next Story