குன்றத்துார் நகராட்சி வலைத்தளங்களில் பிழை

குன்றத்துார் நகராட்சி வலைத்தளங்களில் பிழை

 வலைத்தளங்களில் பிழை

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு ஆகிய இரண்டு பேரூராட்சிகள் கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. குன்றத்துார் நகராட்சியில் 30 வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னை புறநகரில், குன்றத்துார், மாங்காடு நகராட்சிகள் அமைந்துள்ளதால் இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இங்கு, முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால் இந்த இரு நகராட்சிகளிலும் மிக்ஜாம் புயல், மழையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வெள்ளத்தின் போது மக்கள் அவசர உதவிக்கு நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வலைதளத்தை திறந்து பார்த்தால் அதில் செல்போன் எண்கள் உள்ளிட்ட முறையான தகவல் ஏதும் இல்லை. மேலும், வலைத்தளத்தில் 80 சதவீதம் தகவல் திருவண்ணாமலை நகராட்சி குறித்து இருந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், குன்றத்துார் நகராட்சி வலைத்தளத்தில் தலைவர், கவுன்சிலர்கள், ஆணையர் உள்ளிட்ட யாருடைய தொலைப்பேசி எண்களும் பதியப்படவில்லை. நகராட்சியின் அடிப்படை தகவல்கள் கூட வலைத்தளத்தில் இல்லை.

Tags

Next Story