செங்கம் அருகே கன்று விடும் திருவிழா

செங்கம் அருகே கன்று விடும் திருவிழாவில் முதல் பரிசு 25 ஆயிரம் வழங்கி கெளரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 6 மாதங்கள் வரை பாரம்பரிய எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். இதேபோன்று இளம் கன்றுகளை களமிறக்கி குறிப்பிட்ட இலக்கை குறைந்த வினாடியில் கடக்கும் காளை கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கு கௌரித்து வருகின்றனர் இதே போல் செங்கம் அடுத்த கொட்டகுளம பகுதியில் இந்த ஆண்டு கன்று விடும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது விழாவில் உள்ளூர் மற்றும் அல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட கன்றுகள் களம் கண்டு வெற்றி பெற்ற காளைக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசாக 15000 என தொடர்ந்து 61 பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இந்த கன்று விடும் திருவிழாவில் கொட்டகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.

Tags

Next Story