காணும் பொங்கல் திருவிழா முன்னிட்டு எருதுகட்டு விழா

காணும் பொங்கல் திருவிழா முன்னிட்டு எருதுகட்டு விழா

எருதுகட்டு விழா 

ராணிப்பேட்டை மாவட்டம், குப்படிசாத்தம் பகுதியில் நடைபெற்ற எருதுகட்டு விழாவில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமத்தில் இன்று ஸ்ரீ கருகாத்தம்மன் கோவில் மற்றும் காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும் எருதுகட்டும் விழா ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அசோக் முன்னிலை வகித்தார்.

இத் திருவிழாவானது தொன்று தொட்டு பாரம்பரியமாக ஊர் நன்மைக்காகவும், பொதுமக்கள் கால்நடைகள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து எருதுகாட்டும் விழாவில் பங்கேற்ற காளை சீறிப் பாய்ந்தது அதனை அடக்கும் வகையில் இளைஞர்கள் தங்களது திறமைகளை காட்டினர். இந்த நிகழ்ச்சியை காண மாம்பாக்கம், பாரியமங்கலம், தோனிமேடு, ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு எருது காட்டும் விழாவை பார்த்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story