உழவர் சந்தையில் அத்தியாவசிய காய்கறிகள் உயர்வு

உழவர் சந்தையில் அத்தியாவசிய காய்கறிகள் உயர்வு

விலை உயர்வு

தர்மபுரி உழவர் சந்தையில் பூண்டு, பீன்ஸ், பச்சை பட்டாணி உட்பட மலைப்பயிர் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது.

தர்மபுரி நான்கு ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது தர்மபுரி உழவர் சந்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அத்தியாவசிய காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு வேளாண்மை துறை மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு பொதுமக்கள் 100% வாக்களிக்கும் வேண்டும் என்ற அடிப்படையில் விடுமுறை அளித்த நிலையில் இன்று காலை 6:00 மணிக்கு வழக்கம் போல் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது. இருப்பினும் பீன்ஸ்,பூண்டு, பச்சை பட்டாணி என பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பிடத்தக்கது கோடை காலம் என்பதால் காய்கறிகளின் வரத்து சரிந்து காணப்படுவதால் மேலும் பல்வேறு காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story