எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோயில் கோபுர கலசங்கள் ஆய்வுக்கு பின் இன்று மறு கும்பாபிஷேகம் !

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோயில் கோபுர கலசங்கள் ஆய்வுக்கு பின் இன்று மறு கும்பாபிஷேகம் !

கும்பாபிஷேகம் 

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோயில் கோபுர கலசங்கள் ஆய்வுக்கு பின் இன்று மறு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோயில் கோபுர கலசங்கள் ஆய்வுக்கு பின் இன்று மறு கும்பாபிஷேகம் நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) திருக்கோயில் 8 செப்பு கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டதில் ஐயப்பாடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறையினரால் ஆய்வு மேற்கொண்டு லேக்கர் கோட்டிங் பூசப்பட்டு மறு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2023ஆம்‌ ஆண்டு மூலவர், சுவாமி, அம்பாள் ராஜகோபுரம் உட்பட 8 செப்பு கலசத்தில் தங்கம் முலாம் பூசப்பட்டு கும்பாபிஷேகம் 2023 ஜனவரி 13 தேதி நடைபெற்றது.

அந்த கலசங்கள் நிறம் மங்கி காணப்பட்ட நிலையில்,தங்க முலாம் பூசப்பட்டதில் ஐயப்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வல்லுநர் குழுவினரால் கடந்த 8ஆம் தேதி கலசங்களை யாக பூஜைகள் செய்து கலங்களை கலற்றி அதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் கலசத்தில் தங்க முலாம் பூசப்பட்டது உறுதி செய்யப்பட்டதோடு, லேக்கர் கோட்டிங் பூசப்படாததால் அதன் நிறம் மங்கியதும் தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து கலசங்கள் மீண்டும் அதன் நிறம் மங்காமல் இருக்க லேக்கர் கோட்டிங் பூசப்பட்டு, மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக சாலை செய்யட்டு யாக பூஜை நிறைவு பெற்று மகா தீபாரதனை நடைபட்டது.

கடம் புறப்பாடும் தொடர்ந்து, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மறு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசப்பட்டதில் ஐய்யப்பாடு எழுந்ததை தொடர்ந்து லேக்கர் கோட்டிங் பூசப்படாததால் அதன் நிறம் மங்கி காணப்பட்ட நிலையில், தற்போது லேக்கர் கோட்டிங் பூசப்பட்டு அதன் நிறம் மங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story