எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா தொடக்கம்
எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா தொடக்கம்
நாகை மாவட்டம், எட்டுக்குடி சுப்பரமணிய சுவாமி (முருகன்) கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றததுடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு சந்தனம், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதன் பின்னர் வேல் மயில் பொறித்த கொடியானது, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
எட்டுக்குடி முருகன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22 ஆம் தேதி அன்றும், அதனை தொடர்ந்து 23ஆம் தேதி சித்தரை பௌர்ணமி அன்று பால் காவடி திருவிழா ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து 22ம் தே தி காலை முதல் 24ம் தேதி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டுவந்த பால் காவடியில் கொண்டு வந்த பால்களை கொண்டு இடை விடாமல் பால் அபிஷேகம் நடைபெறும் . விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.