புனித சூசையப்பா் திருத்தலத்தில் நற்கருணை பவனி

X
சூசையப்பர் கோயில்
கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தல திருவிழா 10ஆவது திருநாளான நேற்று நற்கருணை பவனி நடைபெற்றது.
கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா ஏப்ரல் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் நற்செய்தி பெருவிழா, நற்கருணை ஆசீா், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் திருநாளான நேற்று திருப்பலியும், அதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பா் சொரூபம் தாங்கிய சப்பர பவனியும் நடைபெற்றன. இந்நிலையில் 10ஆவது திருநாளான இன்று காலை 7 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளாா், காமநாயக்கன்பட்டி உதவிப் பங்குத்தந்தை செல்வின் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். அதில், 15 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.
Next Story
