காஞ்சியில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன்
கொட்டும் மழையிலும் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள்
காஞ்சிபுரம் குமரக் கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. காலையில் பல்லக்கிலும், இரவு மான் வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தார். கந்தசஷ்டி விழா நடக்கும் ஆறு நாட்களிலும், பக்தர்கள் கோவில் பிரகாரத்தை 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்த நிலையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கோவில் வெளிபிரகாரத்தை 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, பக்தி பரவசத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.
Tags
Next Story