கள்ளச்சாராய சாவை தடுக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் - வேல்முருகன்
வேல்முருகன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை உட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.மேலும் இந்தக் கூட்டத்தில் 36 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது மேலும் இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியதாவது தமிழகத்தில் அதிமுக, திமுக எந்த ஆட்சி நடைபெற்றாலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் சாவுகள் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறை, வருவாய் துறை மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், எம் எல் ஏ, அந்தத் தொகுதி எம்பி, துறை சார்ந்த அமைச்சர் ஆகியோர் பொறுப்பேற்க செய்கின்ற வகையில் தமிழக முதலமைச்சர் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும்.,
மேலும் மாவட்ட ஆட்சியர் கீழ் இயங்கக்கூடிய ஏனைய துறைகளும் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும், மேலும் சமூக நீதியின் பிறப்பிடம் என கூறப்படும் தமிழகத்தில் இன்றைய சூழலில் சமூக நீதி கிடைக்கப்பெறாமல் இருப்பதாகவும் இதற்கு காரணம் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவதில்லை எனவும் எனவே சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அந்தந்த சாதியில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கல்வி,வேலை வாய்ப்பு, வழங்கப்பட்டால் தான் உண்மையான சமூகநீதி எனவும், மேலும் நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோன்று போக்குவரத்து துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகள் நிரப்பப்படுவதாகவும் அதனை தவிர்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சீனியாரிட்டி அடிப்படையில் பணியினை நிரப்பப்பட வேண்டும் எனவும், மேலும் பரந்தூர் மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு இடம்பெயரவுள்ளதால் ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு பரந்தூர் மக்களின் கோரிக்கை ஏற்று விமானநிலையம் கட்டுவதை கைவிட வேண்டும் எனவும் பேசினார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசி பதவிகள் ஒன்றிய பதவிகளை 90 சதவீதம் தமிழக அரசு பதவிகளை 100 சதவீதம் தமிழக மக்களுக்கு வழங்க செய்ய வேண்டும் எனவும் கூறினார். தமிழகத்தில் மணல் கொள்ளை அளவுக்கு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கள்ளச்சாராய சாவை நான் இரும்புகரம் கொண்டு அடக்குவேன் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார் அதேபோன்று மணல் கொள்ளை,கிரானைட் கொள்ளை, தாது மணல்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என்றால் தமிழக அரசே மணல் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.