கரூரில்,EVKS இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.
Karur King 24x7 |14 Dec 2024 11:22 AM GMT
கரூரில்,EVKS இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.
கரூரில்,EVKS இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர். கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் மத்திய துணை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் ஆன EVKS இளங்கோவன் மறைவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு, கரூர் மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கரூர் மாமன்ற உறுப்பினருமான ஸ்டீபன் ராஜ் தலைமையில் திரு. இ வி கே எஸ் இளங்கோவன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகர தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய துணை தலைவர் கண்ணப்பன், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் முகமது அலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர்.
Next Story