மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்
பொன் ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ரூபாய் 222 கோடி மதிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மேம்பாலத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.மேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சீரமைப்பு பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டதுடன் தடுத்து நிறுத்தினார்.
பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் சதிச்செயல் நடந்திருப்பதாகவும், தடயங்கள் அழிக்கபட்டிருப்பதாகவும் பாலத்தை தகர்க்க சதி செயலில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றசாட்டுகளை முன்வைத்தார்.கனிமவள கடததலுக்காக கட்டப்பட்ட பாலம் அல்ல, மக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட பாலம் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். பாலத்தை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை பாலம் வேலை செய்ய அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். அவருடன்பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.