அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல் !
அமைச்சர் பி.தங்கமணி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி அவர்களின் முயற்சியின் காரணமாக நிதி ஒதுக்கப்பட்டு ,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிபாளையம் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களை சந்தித்த பி.தங்கமணி எம்எல்ஏ அவர்கள் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அம்ருத் 2.0 என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய்கள் அனைத்து தெருக்களிலும் அமைத்து, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கின்ற பணி முழுமையாக நடைபெறவில்லை.
நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து, முழுமையாக பேட்ச் ஒர்க் போடப்படாமல் உள்ளது .ஜீவா செட் ஆண்டிக்காடு வாய்க்கால் ரோடு, உள்ளிட்ட இடங்களில் தார் சாலைகள் மோசமான நிலையில் இருக்கிறது.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், விபத்து அதிகம் நடைபெறும் கோவிந்தம் பாளையம் ஆலம்பாளையம் சந்திப்பு சாலை, சின்ன கவுண்டன் பிரிவு ரோடு கோவிலாங்காடு சாலை பள்ளிபாளையம் தனியார் காகித ஆலை சாலை உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களிடம் வலியுறுத்தி மனு வழங்கினார்.