முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம்

முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம்
X
கக்கன் உருவ படத்துக்கு மரியாதை செலுத்திய குமரி எம்.பி.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் கக்கனின் திருவுருவப்படத்திற்கு எம்பி விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
விடுதலை போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து கக்கன் திருவுருவப் படத்திற்கு விஜய்வசந்த் எம்.பி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story