தேர்தல் அலுவலரிடம் முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

தேர்தல் அலுவலரிடம் முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் 

கரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பிறகு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ரூர் மாவட்டம், புகலூர் காகித ஆலை விருந்தினர் மாளிகையில்,கரூர் பாராளுமன்ற தொகுதி பொது மேற்பார்வையாளர் ராகுல் அசோக்கை சந்தித்து நேற்று மாலை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிமுகவுக்கு ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சி மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் மாவட்ட தேர்தல் தேர்தல் அலுவலரும், மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருவதாக குற்றம் சுமத்தினர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூர் யூனியன் பகுதியில், அதிமுக வேட்பாளர் தங்கவேலு உடன் சென்று பிரச்சாரம் செய்தோம். நாங்கள் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி பெற்ற அதே நாளில் அதே இடத்தின் அருகாமையில் காங்கிரஸ் கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய காவல்துறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அனுமதி அளித்திருந்தார். ஆனால், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பல் டூவீலரில் வந்து ஒருவர் மீது மோதி விட்டு அங்கு பிரச்சனை செய்தனர். இதுகுறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. இதேபோல, பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டாலும் அலைக்கழிக்கடிக்கப்படுகிறோம்.

மேலும், அனுமதி பெற்ற பிறகு கொடிகளை நட்டு வைத்தால் அதனை காவல்துறையினர் எடுத்துச் சென்று விடுகிறார்கள். அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான வழக்கும் போடவில்லை இதுவரை. இவ்வாறு காவல்துறையும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் ஒருதலை பட்ச்சமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், கரூர் பாராளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. மேலும், விடிய விடிய சட்டவிரோதமாக குண்டர்களை வைத்து மணல் அள்ளி அதன் மூலம் நாளொன்றுக்கு பத்து முதல் 20 லட்சம் வரை வருமானம் ஈட்டி, அந்த பணத்தை தேர்தலுக்காக செலவு செய்து வருகின்றனர். இவர்களை சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இயக்குவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அதிகம் வாக்கு பெறக்கூடாது என்பதற்காக இதுபோன்ற செயல்களில் மணல் கடத்தல் குண்டர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி என்பதால் அவர்கள் இஷ்டத்துக்கு ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இன்று கரூர் பாராளுமன்ற தொகுதி பொது மேற்பார்வையாளர் ராகுல் அசோக்கை சந்தித்து புகார் அளித்துள்ளோம். இது தொடர்பாக சென்னையிலும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். எனவே, கரூர் பாராளுமன்ற தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் பணியாற்றும் காவல்துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story