ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்கப்பா - உத்தரவிட்ட முன்னாள் அமைச்சர்
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட தொண்டர்கள்
விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தின் போது வந்த ஆம்புலன்சுக்கு தொண்டர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் நாடாளுமன்ற பொது தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பாண்டியன்நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வேன் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடக்கோரி முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அங்கு இருந்த கார்களை அப்புறப்படுத்த கோரி முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டார். இதை எடுத்து அங்கு இருந்த தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர்.
Next Story