சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவிய முன்னாள் அமைச்சர்

சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவிய முன்னாள் அமைச்சர்
நிதியுதவி வழங்கல் 
சிவகாசி அருகே தசைபாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவிற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதியுதவி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெள்ளையாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சேர்ந்த பாண்டி -மாரிஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 8வயது மகன் கபின்உசேன் உள்ளார்.இந்த சிறுவன் கடந்த 1வருடமாக தசைபாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் அந்த சிறுவனின் மருத்து செலவிற்கு போதுமான பணம் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் பாண்டி மாரீஸ்வரி தம்பதி தனது மகன் கவின் உசேனுக்கு மருத்துவ செலவிற்கு உதவ கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் உதவி கோரிய நிலையில் உடனே சிறுவனின் மருத்துவ செலவிற்கு ரூ. 50ஆயிரத்தை வழங்கினார்.பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story