ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை . 

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை . 
தளவாய் சுந்தரம் எம் எல் எ
பொருட்களை சரியாக வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ -வும், முன்னாள் அமைச்சர்ருமான தளவாய் சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் 40 நியாய விலை கடைகள் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு குறித்த தேதியில் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என மீனவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிப்பு உள்ளாகி உள்ளனர். குறித்த காலத்தில் பொருட்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று சேர ஏதுவாக வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். கடற்கரை கிராமமான மணக்குடியில் உள்ள மீனவக் கூட்டுறவு சங்க நியாய விலை கடைக்கு டிசம்பர் மாதம் வரப்பட்ட அரிசி மற்றும் உணவுப் பொருட்களின் எடை மிக குறைவாக காணப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை குறித்த காலத்தில் அனுப்பாமலும் எடை குறைவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story