திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்
தர்மபுரி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் செட்டி கரை,ராஜா தோப்பு,சோலை கொட்டாய், டீ கடை, குரும்பட்டி, ஆலங்கரை, போன்ற பல்வேறு கிராமங்களில் இன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அ.மணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். உடன் ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆகியோர் பொது மக்களிடையே தமிழக அரசு சாதனைகளை குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது எனவே உதயசூரியன் சின்னத்திற்கு அதிக வாக்கு வித்தியாச த்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடையே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
Next Story