உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் எம்எல்ஏ, சமாதானப்படுத்திய அண்ணாமலை

உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் எம்எல்ஏ, சமாதானப்படுத்திய அண்ணாமலை

தேர்தல் பிரச்சாரம் 

கோவையில் இதுதான் நான் பார்க்கும் கடைசி தேர்தல் என உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்ராசுவை பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரை பிரசாரம் மேற்கொண்டார்.அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்ராசு பிரசாரம் மேற்கொண்டார்.

சின்ன தடாகம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது பிரதமர் மோடிக்கு ஆதரவாக 400 எம்பிக்களை அனுப்ப உள்ளோம் அதில் ஒரு எம்பியாக அண்ணாமலை செல்ல உள்ளார் என கூறினார். நாம் கேட்காமலேயே ஒரு வெற்றி வேட்பாளரை நமக்கு கொடுத்து விட்டார்கள் என கூறியவர், தொடர்ந்து பேசியபோது நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான் 80 சதவீத வாக்குகளை அண்ணாமலைக்கு பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட சின்ராசு நான் கடைசியாக பார்க்கும் தேர்தல் இது என உருக்கமான குரலில் நான் தழுதழுக்க தெரிவித்தார்.அப்போது அண்ணாமலை ஆறுதலாக புன்னகைத்து கட்டி அணைத்துக் கொண்டார்.

Tags

Next Story