வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில்  ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு பதிவாகும் வாக்குகள், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு வாக்குப்பதி இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்படும். அங்கு 46 நாட்கள் பாதுகாக்க வைக்கப்பட்ட பின்னர் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த மையத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், எஸ்பி சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி, தேர்தல் பிரிவு தாசில்தார் வினோத் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Tags

Next Story