ஆசிரியருக்கான தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆசிரியருக்கான தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

தேர்வை ஆய்வு செய்த ஆட்சியர்

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தோம்னிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் கற்பகம், பிப்ரவரி 4ம் தேதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த இந்த தேர்வெழுத மொத்தம் 559 நபர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் 545 நபர்கள் தேர்வெழுதினர். 14 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story