தி.மலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு
அறையை ஆய்வு செய்த அதிகாரி
தி.மலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை எ.வ.வே. கம்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையினை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும்,
போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் எ.வ. வே. கம்பன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story