ஈரோட்டில் உற்சாகமாக கொண்டாட்டம்...!
ஈரோட்டில் சமூக வேறுபாடு இன்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுக் கூடிய புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு ஒன்றுக் கூடி வருடம் தோறும் புத்தாண்டை பொதுமக்கள் கொண்டாடத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இதையடுத்து இந்தாண்டு ஈரோடு மாநகராட்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதம் கடந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் 2024ம் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். புத்தாண்டு பிறந்தவுடன் வண்ண நிற பலூன்களை வானில் பறக்க விட்டும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் எஸ்பி ஜவஹர் கலந்து கொண்டு கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
Next Story