நகராட்சி அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் ஆய்வு

நகராட்சி அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் ஆய்வு

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் சொத்து வரி வசூல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.


திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த நகராட்சி நிர்வாக இயக்குனர் சொத்து வரி வசூல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் 2023 -24ம் ஆண்டிற்க்கான சொத்து வரி நிலுவையின்றி வசூல் செய்யவும், நகராட்சி பகுதியில் சொத்துவரி விதிக்கப்படாத கட்டடங்களை கண்டறிந்து புதிய சொத்து வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு குடியிருப்பு சொத்து வரி விதிக்கப்பட்டு இருந்தால், அதனை கண்டறிந்து வணிக பயன்பாட்டிற்கு மாற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் குமார், பொறியாளர் வெங்கட்ராமன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story