மாற்றுத்திறனாளிகள்,நோயாளிகளுக்கு தோ்தல் பணியில் விலக்கு - கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள்,நோயாளிகளுக்கு தோ்தல் பணியில் விலக்கு - கோரிக்கை

தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் போன்றவா்களுக்கு தோ்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலா் க.மாரிமுத்து, மாவட்ட தலைவா் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், கல்வி மாவட்ட பொறுப்பாளா்கள் சுதா்சன், சிவகுமாா், ராஜ்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் மாடசாமி, வட்டார பொறுப்பாளா்கள் பவுல் அந்தோணிராஜ், மணிமாறன், ஐயப்பன், ரவிச்சந்திரன், ரவி, அருள்ராஜ், குமரேசன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனா். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, புளியங்குடி, ஆய்க்குடி, சாம்பவா் வடகரை, அச்சன்புதூா் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஜனவரி 2022 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Tags

Next Story