சேலம் மத்திய சிறையில் போலீசாருக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு

சேலம் மத்திய சிறையில் போலீசாருக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு

விழிப்புணர்வு

சேலம் மத்திய சிறையில் நடந்த உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பணிக்கு ஏற்றார் போல் உடற்பயிற்சி செய்வது, உணவுகள், உறக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சேலம் மத்திய சிறை, சேலம் பெண்கள் தனி கிளைச்சிறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் தலைமை தாங்கினார். இதில் தனியார் உடற்பயிற்சி மைய பயிற்றுனர் குருமூர்த்தி கலந்து கொண்டு, தினமும் உடற்பயிற்சியின் அவசியம், சராசரி தூக்கம், உணவு கட்டுப்பாடு, சரிவிகித உணவு மற்றும் சிறை பணிக்கு ஏற்றாற்போல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர் சிவா, சேலம் பெண்கள் தனிக்கிளைச்சிறை உதவி சிறை அலுவலர் செல்வி, முதல் தலைமை காவலர் பச்சமுத்து உள்பட 80 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story