மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கண்காட்சி மற்றும் விற்பனை
ஈரோடு குமலன்குட்டையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது.
ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும், இக்கண்காட்சியானது 20 ம் தேதி வரை முடிய 9 நாட்கள் காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.