திருப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கண்காட்சி

திருப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கண்காட்சி

கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி கலந்து கொண்டார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை வேதியியல் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனதிபதி நேரில் பார்வையிட்டு மாணவிகளை பாராட்டினார்.

தொடர்ந்து பேட்டி அளித்த அவர் அத்திக்கடவு அவினாசி திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அவசரக்கதியில் தொடங்கப்பட்டதாகவும் , அதிமுக போல் அல்லாது எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் எனவும் ,

கேரளாவிலிருந்து வரும் தண்ணீர் வீணாகாமல் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தை மாற்றி அதிமுக அரசு செயல்படுத்த துவங்கியதாகவும், தற்போது அதில் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை கோவையில் பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமி ஆலோசனை மேற்கொண்டு முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் ,

விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்பதற்காக எந்த ஒரு திட்டத்தையும் கிடப்பில் போட்டதில்லை எனவும் , தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவினர் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக போராட்டங்கள் அறிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கடந்த முறை கைவிட்ட தேனி தொகுதியின் சேர்த்து புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய கூட்டணி ஆட்சி அமைத்து இந்திய அளவில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story