சென்னையில் கண்காட்சி - மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு

சென்னையில் கண்காட்சி - மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

சென்னையில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சியில் பங்கேற்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கண்காட்சி வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களான பண ஓலையால் செய்த பொருட்கள் பரிசு பொருட்கள் மெழுகுவர்த்தி வீட்டில் செய்யப்படும் சாக்லேட் இனிப்பு பொருட்கள் மண் பானைகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்த கைக்குத்தல் அரிசி ஊறுகாய் வற்றல் வடகம் பனைவெல்லம் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் மீன் ஊறுகாய் போன்ற விற்பனை செய்யப்பட உள்ளது.

எனவே கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 3 பொருட்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் இவ்வாறு நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியுள்ளார்.

Tags

Next Story