மரசிற்பங்கள் மற்றும் கலைபொருட்களின் கண்காட்சி
மதுரை பூம்புகார் விற்பனை நிலையத்தில் மரசிற்பங்கள் மற்றும் கலைபொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கிய நிலையில் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.
கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தில் பலவகை கண்காட்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு நிறுவனம், பூம்புகார் விற்பனை நிலையத்தில் மரசிற்பங்கள் மற்றும் கலைபொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை 21.06.2024 முதல் 30.06 2024 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் மரத்தினால் செய்யப்பட்ட விநாயகர், யானை, அம்பாரி யானை, மரத்தினால் செய்யப்பட்ட நகை பெட்டி, TRAY, அசோக பில்லர், வூட் கார்விங் பைண்டிங், மரத்தட்டு, புத்தர் சிலை, மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், கி செயின், புக் மார்கர், பேப்பர் கட்டர், பென் பாக்ஸ், டேபிள், பூஜா டேபிள், டைனிங் டேபிள் மற்றும் பஞ்சலோக சிலைகள், பித்தளை பொருட்கள், பித்தளை தட்டு, Marble பவுடர் மூலம் செய்யப்பட்ட சிலைகள், காகிதகூழ் சிலைகள், மண் சிலைகள், தஞ்சாவூர் கலைதட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரவி வர்மா ஓவியங்கள், ஆயில் பைண்டிங், கேன்வாஸ் பைண்டிங், மரத்தினால் செய்யப்பட்ட ஓவியங்கள், கருங்காலி மாலை, கருங்காலி கைசெயின், கருங்காலி வேல் போன்றவை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது
குறைந்தபட்சமாக ரூ.150 முதல் ரூ.20,000 ஆயிரம் வரையிலான கைவினைப்பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. மேலும், குறிப்பிட்ட பொருட்களுக்கு 10% சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், பெரியார் ரயில் நிலையத்திற்கு எதிரில் செயல்பட்டுக்கொண்டிருந்த பூம்புகார் விற்பனை நிலையம் தற்பொழுது மாட்டுத்தாவணி அருகில், மேலூர் மெயின் ரோடு, காய்கறி மார்க்கெட் எதிரில், அம்மா மெஸ் அருகில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துகொள்கிறோம். மேலும், இக்கண்காட்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக தொலைபேசி எண். (97874 93375, 99946 66539)-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.