கடம்பாடி வழித்தட சாலையில் விடுபட்ட பகுதி விரிவாக்கம்

கடம்பாடி வழித்தட சாலையில் விடுபட்ட பகுதி விரிவாக்கம்
கடம்பாடி வழித்தட சாலையில் விடுபட்ட பகுதி விரிவாக்கம்
கடம்பாடி வழித்தட சாலையில் விடுபட்ட பகுதி விரிவாக்கம் பனி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு இடையே, 12 கி.மீ., தொலைவுக்கு தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது. அத்தடத்தில் கடம்பாடி, மேலகுப்பம், எடையூர், பட்டிக்காடு, கருப்பங்காடு, அச்சரவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இத்தடம் நீண்டகாலமாக குறுகிய ஒருவழியாக இருந்தது. திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் இடையே, பிரதான தடமாக எச்சூர் வழி பாதையும் உண்டு. அதில் போக்குவரத்து தடைபட்டால், மாற்றுப் பாதையாக, கடம்பாடி தடத்தில் வாகனங்கள் செல்லும். கடம்பாடி பகுதியில், பிரசித்திபெற்ற மாரி சின்னம்மன் கோவில் உள்ளது.

குறுகிய சாலையில், கனரக வாகனங்கள் எளிதாக செல்ல இயலவில்லை. ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்வதும் சிக்கலாக உள்ளது. மாமல்லபுரம் போக்குவரத்திற்கு, கடம்பாடி வழி சாலையும் அவசியம் என கருதி, அத்தடம் இருவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது. 10 மாதங்களுக்கு முன் பணிகளை துவக்கி, குறிப்பிட்ட தொலைவிற்கு அகலப்படுத்தப்பட்டது.

பழைய குழாய் பாலங்களை அகற்றி, புதிய கான்கிரீட் பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால், புதுச்சேரி சாலை சந்திப்பிலிருந்து, சில கி.மீ., தொலைவுக்கு சாலை அகலப்படுத்தப்படாமல், பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பாலம் சாலையுடன் இணைக்கப்படாமல், அபாய பள்ளங்களுடன் இருந்தது. இது குறித்து, நம் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது.

தற்போது, விடுபட்ட பகுதிகளில் சாலையை விரிவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பால இணைப்பு பணியும் நடக்கிறது.

Tags

Next Story