நாற்று எடுக்கும் பணிக்கு கூலி உயர்த்த எதிர்பார்ப்பு

நாற்று எடுக்கும் பணிக்கு கூலி உயர்த்த எதிர்பார்ப்பு

நாற்று எடுக்கும் பணி

உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், வயலில் நெல் பயிரிட, நாற்று எடுக்கும் பணிக்கு கூலி உயர்த்த வேண்டும் என, விவசாய தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நெல் பயிருக்கு நடவு பணி மேற்கொள்வதற்கு, ஒரு மாதம் முன், நெல் விதை பதியம் போட்டு, நாற்று தயார் செய்வது வழக்கம். அவ்வாறு தயார் செய்யும் நெல் நாற்றுகளை, நிலங்களில் தண்ணீர் நிரப்பி, நாற்று எடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கான சாகுபடியை, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நாற்று எடுத்தல், நடவு செய்தல் உள்ளிட்ட விவசாய பணிகளில், கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து, பினாயூர் கிராம விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2020ம் ஆண்டு வரை ஒரு முடிச்சு நாற்று எடுக்க, 1.50 ரூபாய் வீதம், 100 நாற்று முடிச்சுக்கு, 150 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒரு முடிச்சு நாற்றுக்கு, 2 ரூபாய் என, 100 முடிச்சுக்கு, 200 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது அனைத்து பொருட்களும் விலை ஏற்றம் காரணமாக, இந்த கூலி போதுமானதாக இல்லை. எனவே, நாற்று எடுக்க கூடுதலாக கூலி வழங்க விவசாய நில உரிமையாளர்கள் முன் வர வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story