மதுராந்தகம் பஸ் நிலையத்தில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு

 சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் சிசிடிவி பொருத்த எதிர்பார்ப்பு
மதுராந்தகம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், 30 ஆண்டுகள் கடந்து பழமையானதால், இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் அருகே, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக பேருந்து நிலையம் செல்லும் சாலையில், அரசு மதுபான கடை உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்கள், அப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், தற்காலிக பேருந்து நிலையத்தில், இரவு நேரத்தில் நிறுத்தப்படும் டவுன் பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள பயண சீட்டுகளை, மர்ம நபர்கள் திருடி செல்வதாக தெரியவந்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர், தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில், 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story