தனியார் தொழிற்சாலையில் ரூ.6 கோடி மதிப்பிலான காலாவதியான பீர்பாட்டில்கள் அழிப்பு!!

தனியார் தொழிற்சாலையில் ரூ.6 கோடி மதிப்பிலான காலாவதியான பீர்பாட்டில்கள் அழிப்பு!!

beer bottles

கும்மிடிப்பூண்டி அருகே மூடப்பட்ட தனியார் பீர் தொழிற்சாலையில் இருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான மதுபாட்டில்களை அதிகாரிகள் அழித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குறுவராஜா கண்டிகை ஊராட்சி பில்லா குப்பம் கிராமத்தில் அப்பல்லோ டிஸ்லரி எனப்படும் பீர் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், சில நிர்வாக காரணங்களால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதை தொடர்ந்து, மூடப்பட்ட தொழிற்சாலையில் சில மர்ம நபர்கள் இரும்பு பொருட்கள், காப்பர் உள்ளிட்டவற்றை திருடி விற்பனை செய்து வந்துள்ளனர். அதேபோல், தொழிற்சாலையில் உள்ள பீர் பாட்டில்களை திருடி குடிப்பதும், அவற்றை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாகவும் உளவு துறை பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோரின் பரிந்துரையின்படி, மதுவிலக்கு ஆயத்தீர்வை அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார் முன்னிலையில் தொழிற்சாலையில் உள்ள மதுபாட்டில்கள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது, சுமார் 50 ஆயிரம் பெட்டிகளில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 6 லட்சம் பீர் பாட்டில்கள் காலாவதியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் தரையில் பெரிய பள்ளம் தோண்டி புதைக்கும் பணிகள் நடந்தது. அப்போது, பாதுகாப்பு கருதி போலீசாருடன் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 108 அவசர ஊர்தி வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர். அதில் பயணித்த சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (23), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்தர் (24) ஆகியோரிடமிருந்து 1500 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story