தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்

தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்
ஆலங்குளம் அருகே தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்
ஆலங்குளம் அருகே தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில், தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தின் இளநிலை இறுதியாண்டு மாணவிகளான தீபா தா்ஷினி, திவ்யா, நந்தினி, பிரியதா்ஷினி, ராஜஸ்ரீ, ரோஜா, ஷஜ்மீரா, சுஜிதா ஆகியோா் கீழப்பாவூா் வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண் களப் பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

அதன் ஒருபகுதியாக, மாணவி ராஜஸ்ரீ தென்னையில் காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்க தோட்டத்திலுள்ள அனைத்து இறந்த தென்னை மரங்களையும் அகற்றி எரித்தல், முதிா்ந்த வண்டுகளை இரும்புக் கொக்கிகளைப் பயன்படுத்தி பனை கிரீடத்திலிருந்து பிரித்தெடுத்தல், நாற்றுகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறை மெல்லிய மணலால் மூடப்பட்ட 10.5 கிராம் (தோராயமாக 3 அல்லது 4) நாப்தலீன் பந்துகளை இடுதல், வண்டுகளைப் பிடிக்கவும் கொல்லவும் காண்டாமிருகக் கவரும் பெரோமோன் பொறி அமைத்தல் போன்ற முறைகள் மூலம் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம் என விளக்கமளிக்கப்பட்டது.

Tags

Next Story