தேர்தல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு!
பட்டாசு வெடிப்பு
விதிமுறைகளை மீறி உத்திரமேரூரில் பாமக வேட்பாளர் வரவேற்க பட்டாசுகள் விடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு தேர்தல் நடைபெறும் தேதி அறிவித்த நேரம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அனைத்தும் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 12 பறக்கும் படைகள் 12 நிலை குழுக்கள், நான்கு காணொளி காட்சி குழுக்கள் என அமைக்கப்பட்டு 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் பறக்கும் படையினர் ஒரு சில இடங்களில் மட்டுமே அனுமதியின்றி எடுத்துச் சென்ற பொருட்களை பறிமுதல் செய்து அதனை தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பட்டாசு வெடிப்பதற்கு தடை இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி உத்திரமேரூரில் பாமக வேட்பாளர் வரவேற்க பட்டாசுகள் விடுக்கப்பட்டது. இதேபோல் கிராமப்புற பகுதிகளிலும் வரவேற்பு மேற்கொள்ள பட்டாசுகள் விற்கப்பட்டு வேட்பாளரை வரவேற்று மகிழ்ந்தனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் எனவும், குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் பட்டாசுகள் வெடிப்பதில் மிகுந்த கவனம் தேவை என்பதும் பொதுமக்கள் அதிகம் கூடும் அரசியல் நிகழ்வுகளில் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தற்போது தேர்வு நேரங்கள் நடைபெற்று வருவதாலும் பட்டாசுகளை மாணவர்கள் நலன் கருதி வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story