அரசு பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு

அரசு பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு

 கீழப்புதூரில் அரசுப் பஸ்சின் டயர் எதிர்பாராவிதமாக வெடித்ததால், மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்புதூரில் அரசுப் பஸ்சின் டயர் எதிர்பாராவிதமாக வெடித்ததால், மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டியில் பரபரப்பு மிகுந்த கீழப்புதூரில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று கீழப்புதூரில் அருகே செல்லும் போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.பேருந்து ஓட்டுநர் சமார்தியமாக வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.உடனடியாக பயணிகள் அனைவரும் மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.டயர் வெடித்த அரசுப் பேருந்து சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் மதுரை தேகி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேல் கடும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதனால்; சுமார் 1 கி.மீ தூரம் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்த உசிலம்பட்டி போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போராடி போக்குவரத்தை சரி செய்தனர்.

அரசுப்பேருந்தின் டயர் வெடித்த கீழப்புதூர் பகுதியிலிருந்து சுமார் 100மீட்டர் தொலைவில்தான் அரசுப்பேருந்து பனிமணை உள்ளது.சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போக்குவரத்து பனிமணையிலிருந்து டயரை மாற்ற ஊழியர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story