ஜவுளிக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் முனைப்பு

ஜவுளிக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் முனைப்பு

கலந்துரையாடல் கூட்டம் 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஜவுளிக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய முனைப்பு காட்டி வருவதாக கூறியுள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஜவுளி கழிவுகளின் நிலை, ஒழுங்கு முறை, கண்காணித்தல் குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரிவர்ஸ் ரீசோர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மரபியல் கோல்டன் பங்கேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜ்குமார் ராமசாமி, பொதுச் செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் இணைச் செயலாளர் குமார் துரைசாமி, வணிக மேம்பாடு, பிராண்டிங் மற்றும் பசுமை உற்பத்திக்கான துணைக்குழுவின் தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் மேழிசெல்வன், உறுப்பினர் சேர்க்கை குழு தலைவர் சிவசுப்பிரமணியம், துணைத் தலைவர் ரத்தின சாமி, செயற்குழு உறுப்பினர் இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ரிவர்ஸ் ரீசோர்ஸ் நிறுவனம் ஜவுளிக்கழிவுகளை வாங்கும் நிறுவனங்களையும், அதை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களையும் அதிகப்படுத்த வேண்டும். சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அனைத்து ஜவுளிக்கழிவுகளையும் நல்ல விலைக்கு வாங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். உலகில் வருடத்திற்கு 8 ஆயிரம் கோடி ஆடைகள் விற்பனை ஆவதாகவும், அந்த ஆடைகளை உபயோகித்த பிறகு மறுசுழற்சி செய்வது பெரும் சவாலாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் இதுகுறித்து மிகவும் கடுமையாக உள்ளது. முன்னணி பிராண்டுகள் மற்றும் பையர்கள் இதனால் தாங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து இதுபோன்ற மறுசுழற்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று ரிவர்ஸ் ரீசோர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மரியஸ் கோல்டன் கூறினார்...

Tags

Next Story