கடைகளைத் திறக்க விதித்த தடை உத்தரவு நீட்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள கடைகளை திறப்பதற்கு எட்டு வார காலத்திற்கு தடை நீடிக்கும் என வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலைய 34 கடைகள் ஏலம் விட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதை எதிர்த்து திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றம் கடைகளை திறப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.இவ்வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஆஜராகவில்லை. நீதிபதிகள் திண்டுக்கல் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்த வேண்டும் என ஆணையாளர் இந்த வழக்கின் தடையை நீக்க மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை. ஆகையால் இந்த வழக்கை 8 வார காலத்திற்கு தள்ளி வைத்து ஏற்கனவே கடைகளைத் திறக்க விதித்த தடை உத்தரவை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story