நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தென்னக ரயில்வே 

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் நவம்பர் மாத மூன்றாவது வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.45 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

Tags

Next Story